

புதுடெல்லி,
மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துமூலம் ஒரு பதில் அளித்தார்.
அதில், தண்ணீர் என்பது மாநில பட்டியலில் உள்ளது. ஆகவே, மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் உற்பத்தி ஆகியவற்றுக்காக தங்களது மாநிலத்திற்கென பிரத்யேக செயல் திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.