கடன் வலையில் சிக்கும் இளம் தலைமுறை: இந்திய ரிசர்வ் வங்கி கவலை !

கடன் வாங்கும் பழக்கம் அதிகரிப்பு... சிக்கலில் இளம் தலைமுறை: கவலை தெரிவித்த ஆர்.பி.ஐ.
Young generation getting caught in debt trap: Reserve Bank of India concerned!
கடன் வலையில் சிக்கும் இளம் தலைமுறை:ஆர்பிஐ கவலை
Published on

மும்பை:

இளம் தலைமுறையினர் தங்களது 25 வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

ஆய்வு

பைசாபசார் நிறுவனம் தங்களின் 1 கோடிக்கும் மேல் உள்ள வாடிக்கையாளர்களை ஆய்வு செய்ததில் அவர்களில் தலைமுறைகள் மாறும்போது முதல் முறையாக கடன் பெறும் வயதும் கனிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 1960-களில் பிறந்தவர்கள் கூட 47 வயதில் தங்களது முதல் கடன் பெறுகிறார்கள், ஆனால் 1990-களில் பிறந்தவர்கள் வயது 25 முதல் 28-க்குள் தங்களது முதல் கடனை பெற்றுவிடுகிறார்கள். இவர்களில் பலர் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் அல்லது பொருள் கடன் மூலமாக இந்த கடன் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களை விட 2000-க்குப் பிறகு பிறந்த தலைமுறையினரிடம் இது மேலும் குறைந்து, 22 வயதிலேயே சிறிய அளவிலான கடன் பெறுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் ஜூலை மாத ஆய்வில், 2026 மார்ச் நிலவரப்படி புதிதாக கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கியவர்களில் 50 சதவீதம் பேர் (Gen Z) இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 2022 மார்ச் மாதத்தில் இந்த விகிதம் 43 சதவீதமாக இருந்தது. 2026 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 3.6 மடங்கு அதிகமாகும். அதேபோல் கிரெடிட் கார்டு நிலுவைக் கடன் ரூ.3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், 2024-ல் முதல் முறையாக கிரெடிட் கார்டு பெற்ற (Gen Z) வாடிக்கையாளர்களில் 31 சதவீதம் பேரிடம் ஏற்கனவே குறைந்தது 2 கடன் கணக்குகள் இருந்துள்ளன. இவர்களில் சுமார் 69 சதவீதம் பேர், முதல் கிரெடிட் கார்டைப் பெற்ற ஓராண்டுக்குள் மற்றொரு கடனையும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் தலைமுறைகள் முக்கியமாக சுற்றுலா, நிகழ்ச்சி மற்றும் பிற நிகழச்சிகளுக்கு அதிகம் கடன் பெறுகிறார்கள். 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பெறபட்ட தனிநபர் கடன் பாதிக்குமேல் சுற்றுலாவிற்காக பெறபட்டிருக்கிறது என்று முத்தூட் பினான்ஸ் நிறுவனம் கூறுகிறது. கடந்த 24 மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ரூ.2000 கோடி வரை செலவிடப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதில் அதிகமாக இளம் தலைமுறையினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் கவலை

‘இளம் தலைமுறையினர் கடன் பெறுவதில் மட்டும் எங்களின் கவலை இல்லை, அவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் , அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியும் அளவிற்கு வருமானம் உள்ளதா என்பதே முக்கியமான கவலையாக உள்ளது’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு கடன் அதிகம் வாங்கி தவணைகள் வருமானத்தை விட அதிகரித்தால், அதிக கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com