மும்பையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கி சென்ற இளைஞர்கள்

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை இன்று முதல் தொடங்கி உள்ளது.
மும்பை,
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய ஐபோன் 17 தொடர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களாக அறிமுகமான இந்த புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் அதிகாலையிலேயே விற்பனை மையங்கள் முன்பு வரிசையில் நின்றனர்.
மும்பை நகரின் பிரபலமான பிகேசி பகுதியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் அருகே, இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். அதிக கூட்டம் காணப்பட்ட நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விரைவில் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றதால், அங்கு சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள் மோதலை கட்டுப்படுத்தி, கூட்டத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.






