திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுவனை கடத்திய இளம்பெண்ணுக்கு வலைவீச்சு

சிறுவனிடம் இளம்பெண் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுவனை கடத்திய இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு திடுக்கிட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர் வீட்டில் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சமீபத்தில் இளம்பெண், சிறுவனை திருமணம் செய்ய அழைத் துள்ளார். ஆனால் சிறுவன் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்தப்பெண், சிறுவனை கடத்தி சென்றுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டி அனுப்பி உள்ளார். செய்வதறியாமல் திகைத்த சிறுவன் இது பற்றி தனது குடும்பத்தினரிடம் கூறினார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுவனை இளம்பெண் கடத்தி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com