புதுச்சேரியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர் கைது

வேறு ஒருவரின் வாக்கை அவர் பா.ஜனதாவுக்கு செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர் கைது
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மண்ணாடிப்பட்டு தொகுதி மண்ணாடிப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர், கள்ள ஒட்டு போட்டார்.

அதாவது வேறு ஒருவரின் வாக்கை அவர் பாரத ஜனதா கட்சிக்கு செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். மேலும் கள்ள ஓட்டு போட்ட நபரை பிடித்து திருக்கனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com