டெலிவரி கட்டணத்தை உயர்த்தியது சோமெட்டா: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சொமாட்டோ தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.2.40 அளவுக்கு உயர்த்தியுள்ளது.
டெலிவரி கட்டணத்தை உயர்த்தியது சோமெட்டா:  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Published on

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம்

ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே, சுடச்சுட உணவை டெலிவரி பணியாளர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வழங்குகின்றனர். இதற்காக டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் கட்டணம் ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.

இந்த நிலையில், சொமாட்டோ தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.2.40 அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.12.50க்கு பதிலாக ரூ.14.90 செலுத்த வேண்டியுள்ளது.கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com