வேலூர்,
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 38,457 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 33,619 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 87.42 சதவீதம் ஆகும்.
கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 24-ந் தேதியன்று நடந்த வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய தேர்வுகளை சில மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு வருகிற 27-ந் தேதி மறுதேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
விடுபட்ட பிளஸ்-2 தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5 மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் 41 பேர் என்று மொத்தம் 46 பேர் தேர்வு எழுதவற்காக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து உள்ளனர். இவர்களுக்காக 13 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.