ஐப்பசி மாத பூஜை; சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜை; சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com