ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 26வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசரஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய 5வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ், கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதற்கடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர்(48 ரன்கள்), 15வது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்ச்சில் பவுல்ட் ஆனார். மறுபுறம் அரைசதத்தை கடந்த மனீஷ் பாண்டே(54 ரன்கள்) உனட்கட் வீசிய 18வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன்(22 ரன்கள்) மற்றும் பிரியம் கர்க்(10 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ்-ஜாஸ் பட்லர் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறினர். ஆட்டத்தின் 2வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ்(5 ரன்கள்) கலீல் அகமது பந்துவீச்சில் பவுல்ட் ஆனார்.

அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 4வது ஓவரில் ரன் அவுட் ஆகி 5 ரன்களுடன் வெளியேறினார். கலீல் அகமது வீசிய 5வது ஓவரில் ஜாஸ் பட்லர்(16 ரன்கள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது.

இதற்கடுத்து களமிறங்கிய சன்ஜூ சாம்சன் 26 ரன்களில் கேட்ச் ஆனார். ராபின் உத்தப்பா(18 ரன்கள்) ராஷீத் கானின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது.

இந்நிலையில் ரியான் பராக்-ராகுல் தவடியா ஜோடி ஒன்றிணைந்து ராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரியான் பராக்(26 பந்துகள் 42 ரன்கள்) 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ராகுல் தவடியா(28 பந்துகள், 45 ரன்கள்) தனது பங்கிறகு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 163 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com