ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்ற போட்டிக்கு சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மைடன் பகுதியில் சென்று நடத்திய சோதனையில் அந்த பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மராட்டியம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com