உணவுத் தரத்தை உயர்த்த புதிய கொள்கை : ஐ ஆர் சி டி சி

தனது புதிய கொள்கையின் மூலம் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்த ஐ ஆர் சி டி சி முடிவு செய்துள்ளது.
உணவுத் தரத்தை உயர்த்த புதிய கொள்கை : ஐ ஆர் சி டி சி
Published on

புதுடெல்லி

மத்திய தணிக்கைத்துறை ரயில்வே உணவின் தரம் குறித்து அறிக்கை அளித்த ஒரு நாள் கழித்து ரயில்வே அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தணிக்கை அறிக்கையானது வழங்கப்படும் உணவானது மனிதர்களின் நுகர்விற்கு ஏற்றதல்ல என்று கருத்துக் கூறியிருந்தது.

உணவின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய சமையலறைகளை அமைப்பது, இப்போதிருக்கும் சிலவற்றை தரம் உயர்த்துவது ஆகியவற்றை மேற்கொள்ளப்போவதாக தனது அறிக்கை ஒன்றில் ரயில்வே துறை கூறியுள்ளது. ஐ ஆர் சி டி சி உணவு தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனித்தனியே செய்வதற்கு கட்டளையினை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. புதிய கொள்கையின்படி ஐ ஆர் சி டி சி அனைத்து நகரும் உணவகங்கள், ரயில்களில் அமைந்திருக்கும் உணவகங்கள் ஆகியவற்றை ரயில்வேயின் உணவுப் பிரிவிற்கு மாற்றி கொடுக்க வேண்டும். நகரும் உணவகங்களுக்கான உணவுகள் ஐ ஆர் சி டி சியிற்கு உரிமையுள்ள, அதனால் இயக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் சமையலறைகளில் இருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்படும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com