சைக்கிள்...மாட்டுவண்டியில்... வைரலாகும் இவான்கா டிரம்ப் மீம்ஸ்கள்

தனது புகைப்படங்களை வைத்து வெளியான மீம்ஸ்களுக்கு டிரம்ப் மகள் இவான்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
Published on

புதுடெல்லி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  இரண்டு நாள் பயணமாக இந்திய வருகையின் போது அவருடைய மகள் இவான்கா டிரம்பும்  அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதியின் அமெரிக்க தூதுக்குழுவின் ஒரு பகுதியாக வந்து இருந்தனர்.

இவான்கா டிரம்ப் இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான அனிதா டோங்ரே மற்றும் ரோஹித் பால் ஆகிய இருவரின் வடிவமைப்பில் உருவாக்கிய  ஆடைகளுடன் வலம் வந்தார்.

இவான்கா இந்தியாவின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது. இதனை சமூக வலைதள வாசிகள் தங்களுக்கு தகுந்தாற்போல் இவான்கா புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

இதுபோன்ற புகைப்படங்கள் வெளிடப்பட்ட ஒரு பதிவை இவான்கா ரீடுவிட் செய்துள்ளார். அதில் இந்திய மக்களின் அரவணைப்பை தான் பாராட்டுவதாக தெரிவித்து உள்ளார்.

அதேபோல் பஞ்சாபி நடிகரும், பாடகருமான தில்ஜித், தனது டுவிட்டர் பக்கத்தில் இவான்காவுடன் தாஜ்மகாலில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர் என் வாழ்க்கையில் இவான்கா வந்தவுடன் அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இவான்கா பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மறக்கமுடியாத தருணம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com