நகைக்கடையில் வாடிக்கையாளரிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருடிய பெண் கைது

நகைக்கடையில் வாடிக்கையாளரிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைக்கடையில் வாடிக்கையாளரிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருடிய பெண் கைது
Published on

மும்பை,

மும்பை தாதர் பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் சம்பவத்தன்று பெண் வாடிக்கையாளர் ஒருவர் நகை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அவர் தனது கைப்பையை அந்த பகுதியில் வைத்துவிட்டு நகைகளை ஆர்வமாக தேர்வு செய்து கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் நகையை வாங்கிவிட்டு பார்த்த போது வாடிக்கையாளரின் கைப்பை மாயமாகி இருந்தது. மாயமான பையில் ரூ.1 லட்சம் நகை மற்றும் பணம் இருந்தது.

கடை ஊழியர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது பெண் ஒருவர் வாடிக்கையாளரின் பையை திருடி செல்வது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து சிவாஜி பார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பையை திருடியது தானேயை சேர்ந்த தீபாலி ரோக்டே என்ற ராணி (வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com