புழலில் காமராஜர் பிறந்த நாள் விழா

சென்னையை அடுத்த புழலில் உள்ள சென்னை வாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் சார்பாக காமராஜரின் 115–வது பிறந்த நாள் விழா
புழலில் காமராஜர் பிறந்த நாள் விழா
Published on

செங்குன்றம்,

சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமையில் நடந்தது. முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் ஏ.என்.எஸ்.கோவிந்தசாமி வரவேற்றார். இதில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை உதவி கமிஷனர் ஆர்.அழகேசன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசு தொகையும், ஏழை எளிய நமாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள் 7 பேருக்கு தங்க சங்கிலி பரிசாக வழங்கப்பட்டது.

இதில் சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, செயலாளர்கள் மணலி செல்லதுரை, எம்.மாணிக்கம், கே.எம்.செல்லதுரை, செயற்குழு உறுப்பினர்கள் எல்.தாமஸ், ஆர்.செல்வக்குமார், கனகசபாபதி, ரத்தினசாமி, எல்லைச்சாமி, கல்லூரி மேலாளர் முத்துசேகர், முதல்வர் மார்க்கிரேட் ஜெசி, பள்ளி முதல்வர் குளோரி ஷீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com