நெல்லையில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் நினைவுநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Published on

நெல்லை,

காமராஜர் நினைவுநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், நாகராஜன், மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இளைஞர் அணி செயலாளர் வேல் ஆறுமுகம், மகளிர் அணி மாநில துணை தலைவிகள் கனி அமுதா, தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் அ.ம.மு.க.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், துணை தலைவர்கள் முத்துகிருஷ்ணன், உதயகுமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது ஹனஸ்ராஜா, மண்டல தலைவர்கள் அய்யப்பன், மாரியப்பன், தனசிங் பாண்டியன், விவசாய அணி பொதுச்செயலாளர் வாகை கணேசன், கலைமணி, முன்னாள் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், இளைஞர் அணி இணை செயலாளர் வி.கே.பி.சங்கர், பேரவை இணை செயலாளர் பரமசிவ அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, சரிதா, பகுதி செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் பால்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தே.மு.தி.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிகுமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் சேவியர், பொருளாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகத்தினர் மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், கணேசன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஜம்மு காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பாக்கியமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் ரத்ததான இளைஞர் கூட்டமைப்பு மற்றும் பாளையங்கோட்டை புதுப்பேட்டை நாடார் தெரு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினரும் இணைந்து காமராஜர் நினைவு நாளையொட்டி அங்குள்ள காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம் செய்தனர். இதேபோல் பல்வேறு கட்சியினர் மற்றும் தரப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com