கருணாநிதி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதுமாக டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் கீழ் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தனக்கன்குளத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அவனியாபுரத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேட்டி மற்றும் மளிகை பொருட்கள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பெருங்குடியில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார். விளாச்சேரியில் ஊராட்சி செயலாளர் சிவன் பாண்டியன் முன்னிலையில் முடி திருத்தும் தொழிலாளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். இந்தநிலையில் விளாச்சேரி மொட்டமலையில் குடிநீர் வசதி, சாலை வசதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதேபோல திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் விமல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஹாட் பாக்ஸ், தோசை கல், சேலை, கோதுமை, அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார். இதேபோல திருநகரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவை பேரூராட்சி முன்னாள் தலைவர் இந்திராகாந்தி, பகுதி செயலாளர் உசிலை சிவா ஆகியோர் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com