புதுடெல்லி,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990களில் புலம்பெயர்ந்த பண்டிட்கள் இதனை ஒரு இதனை ஒரு 'வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் தாய்நாட்டிற்கு மரியாதையுடனும் கண்ணியத்துடனும் திரும்புவதற்கு ஒரு வழி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்களுக்கான உளகளாவிய அமைப்பினர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்டு 5, 2019 இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவானது, இந்தியாவின் இறையாண்மையைக் காக்க தங்கள் வாழ்வையே தியாகம் செய்த நமது பெருமைக்குரிய தலைவர்களாகிய சியாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயால் உபத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் கொள்கைகளை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் தங்களது அடையாளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் காப்பாற்றப்படும் எனவும் விரைவில் தாய்நாடு திரும்ப மோடி அரசாங்கம் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.