சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் கேரளா உணர்வுகளை புறக்கணித்துவிட்டது - ஆர்.எஸ்.எஸ்.

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் கேரளா உணர்வுகளை புறக்கணித்துவிட்டது என ஆர்.எஸ்.எஸ். விமர்சனம் செய்துள்ளது.
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அமர்வில் இடம்பெற்ற பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, மத நம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிட கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் (நவம்பர்) 16ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று கேரளா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் கேரளா உணர்வுகளை புறக்கணித்துவிட்டது என ஆர்.எஸ்.எஸ். விமர்சனம் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கருத்தில் எடுக்கும்போது பக்தர்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் நிலையை ஆய்வு செய்யவும், சட்டப்பூர்வமாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக ஆன்மீக மற்றும் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com