கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 51 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 13 பேர் தொடர்பில் இருந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 131 பேர் குணமடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com