

திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,07,936 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 40 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.