‘உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல; மக்களை கொல்லும் ராஜ்ஜியம்’ - மம்தா பானர்ஜி

உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல; மக்களை கொல்லும் ராஜ்ஜியம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல, மக்களை கொல்லும் ராஜ்ஜியம். அங்கு விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் நடைபெற்றிருப்பது அராஜகமானது, துரதிர்ஷ்டவசமானது. லகிம்பூர் கேரியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். விவசாய சகோதரர்கள் மீது பா.ஜ.க. காட்டும் அலட்சியம் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு எப்போதும் எங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com