கொரோனாவுக்கு 2 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 347 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 61 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்நிலையில் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண்ணும் மதுரை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 60 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com