குமரி மாவட்டத்தில் பரவலாக மழை இரணியல் பகுதியில் 59 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இரணியல் பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று மதியத்தில் இருந்து விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 1.6, பெருஞ்சாணி- 2.2., புத்தன் அணை- 3.4, பூதப்பாண்டி- 3.6, கன்னிமார்- 6.4, குழித்துறை- 20.5, நாகர்கோவில்- 0.1, சுருளகோடு- 6.4, குளச்சல்- 32.6, இரணியல்- 59, ஆரல்வாய்மொழி- 4.4, கோழிப்போர்விளை- 12, அடையாமடை- 4, குருந்தங்கோடு- 15.4, முள்ளங்கினாவிளை- 8 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 541 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 756 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 199 கன அடி தண்ணீர் வருகிறது. அணை மூடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com