உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள்
Published on

நெல்லை,

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வேட்பாளர் செலவினங்கள் கண்காணிப்பு பணிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com