ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் வேலாயுத தாஸ் மகன் முருகன். தி.மு.க. பிரமுகரான இவர் பா.ஜனதாவை பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுபற்றி களக்காடு ஒன்றிய பா.ஜனதா பிரசார அணி ஒன்றிய தலைவரான ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்த சுதாகர் என்ற மணி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.