பாகிஸ்தான் ராவல்பிண்டியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார்.
Published on

ராவல்பிண்டி

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கபரி பஜாரில் சில மர்மநபர்கள் வெடிகுண்டை வீசிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூடப்பட்ட அலுவலகம் குண்டு வெடித்த பகுதி முழுவதும் மோசமாக சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்தார்.

மேலும், இது பயங்கரவாதத்தின் முயற்சி எனவும் ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com