செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.
Published on

பெங்களூரு:

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.

சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலம், 6 மாத கால ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 6 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவு போபோஸின் படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் படம் பிடித்து உள்ளது

ஜூலை 1 ம் தேதி மார்ஸ் ஆர்பிடர் மிஷன் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டது.

போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ கூறும் போது ஸ்டோக்னி, போபோஸின் மிகப்பெரிய பள்ளம் மற்றும் பிற பள்ளங்களுடன் (ஷ்க்லோவ்ஸ்கி, ரோச் & கிரில்ட்ரிக்) இந்த படத்தில் காணப்படுவதாக கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com