புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம்: நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடு

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்வதற்கு, நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம்: நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடு
Published on

லக்னோ,

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழந்து பிற மாநிலங்களில் சிக்கித்தவித்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் ரெயில்கள் மற்றும் பஸ்களில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இதுபோக தனிநபர்கள் பலரும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மராட்டிய மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு விமானத்தில் அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ், வாரணாசி, கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்களில் 1,547 தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று விமானங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இன்று (வியாழக்கிழமை) விமானங்களில் சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 10 பஸ்களில் அமிதாப் பச்சன் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com