சென்னை
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை மதிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் கொண்டு வர முயல்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு பதவி பறிபோகும் என்ற பயத்தில் மிகவும் பதற்றமாக சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசி வருகிறார்.கிராம சபை கூட்டங்கள் சரிவர செயல்படாததே ஊழலுக்கு காரணம் என கூறினார்.