நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காக்காவேரி பகுதியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரேஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, 'பாரத பிரதமர் அப்துல்' என கூறி, பின்னர் சுதாரித்து கெண்டு, பிரதமர் மேடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்றார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் பெயரை அமைச்சர் ஒருவர் மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.