படவீடு பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

படவீடு பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
Published on

குமாரபாளையம்,

படவீடு பேரூராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம், மூலதன நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் முதலைமடையூர் ஏரி மேம்பாடு, தேசிய நெடுஞ்சாலை முதல் கடலைப்பாலியூர் வழியாக மொத்தையனூர் சாலை வரை ரூ.1 கோடி மதிப்பில் தார்சாலை, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 46 லட்சம் கோடி மதிப்பில் வார்டு எண் 7, 8, 9, 10, 11 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.

மேலும் ரூ.90 லட்சம் மதிப்பில் ராசிபுரத்தானூர் பகுதியில் கான்கிரீட் சாலை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கணக்கன்காடு, இந்திராநகர் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.

பூமிபூஜை

திருச்செங்கோடு தாசில்தார் மணிராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதில் படவீடு பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் ஜவாஹர், ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திருமூர்த்தி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com