மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் ; மத்திய அரசு

மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க நேரிடும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுக்க மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com