சென்னை,
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்நிலையில், இன்று தமிழகம், புதுவையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள் என்றும் தனது டுவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.