மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 4 குழந்தைகளுக்கு மாவட்ட பொருப்பாளர் டி.எம். செல்வகணபதி தங்க மோதிரத்தை வழங்கினார்.
Published on

அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு தேவையான பவுடர், ஆயில், சோப், பழம், ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர் பேசும்போது, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த மாதம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கட்சி கொடியெற்றி வைத்து, மாரத்தான் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்படும். அவரது பிறந்தநாளையொட்டி சேலம் மேற்கு மாவட்டத்தில் சங்ககிரி, அரசிராமணி, எடப்பாடி ஆகிய இடங்களில் இதுவரை 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் எத்தனை குழந்தைகள் பிறந்து உள்ளனர் என கணக்கெடுக்கப்பட்டு அந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேலு, சிங்காரம், அவைத்தலைவர் மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com