பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு - காங்கிரஸ் கட்சி மீண்டும் வீடியோ வெளியீடு

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி மீண்டும் வீடியோ வெளியிட்டது.
Published on

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு அறிவித்தார். இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் 26-ந் தேதியும், இந்த மாதம் 9-ந் தேதியும் வீடியோ வெளியிட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் ஒரு வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இது பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு முறைகேடாக பணம் மாற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்ட வீடியோவுக்கு பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் தற்போது ஆதாரப்பூர்வமாக மீண்டும் வீடியோ வெளியிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக பா.ஜனதா பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறது.

இந்த முறைகேடு நடந்த போது காவலர்கள் என கூறிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தூங்கி கொண்டு இருந்தார்களா?. ஏழைகள் மற்றும் அரசின் பணத்தை கொள்ளையடிக்க பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சிலருக்கு உதவிகரமாக இருந்துள்ளது. மோடி அரசின் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் உதவியுடன் இந்த முறைகேடு நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com