மதுரையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மதுரையில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். மேலும் 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2858 ஆக இருந்தது.

இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட இவர்கள் 259 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com