நான் இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை - இயன் மோர்கன் ஒப்புதல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தான் சரியாக ரன் அடிக்கவில்லை என்று கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
Published on

அபுதாபி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

இதற்கிடையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள மோர்கன் 111 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவரது பேட்டிங் குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியையடுத்து கொல்கத்தா கேப்டன் இயன் மோர்கன் போட்டிக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவரிடம் பேட்டிங் குறித்து வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோர்கன், ஆம்... நடப்பு தொடரில் நான் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. குறைவான ரன்களையே அடித்துள்ளேன். நீண்ட காலமாக குறிப்பிடத்தக்க ரன்களை அடிக்காமல் செல்லும்போதும், அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க வேண்டும். அது அனுபவம் மூலம் வெளிப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com