திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் சாவு 3 பேர் படுகாயம்

திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆதிகேசவபுரம் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 65). இவர் நேற்று தனது மகன் தேவேந்திரன் (35) என்பவருடன் செங்கல்பட்டு சென்று விட்டு மீண்டும் திருக்கழுக்குன்றம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தேவேந்திரன் மோட்டார்சைக்கிளை ஓட்டினார்.

திருக்கழுக்குன்றத்தை அடுத்த கீரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கண்ணியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜேஷ், குமரவேல் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com