கார் விபத்தில் சிக்கிய கேரள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம்

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம் அடைந்துள்ளார்.
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இசையமைப்பாளர், வயலின் வித்வான் மற்றும் பாடகராக இருந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி லட்சுமி, மகள் தேஜாஸ்வினி பாலா (வயது 2).

இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னர் மகள் பிறந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் தனக்கு மகள் பிறந்ததற்கு நன்றி செலுத்துவதற்காக திரிசூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளனர்.

இதில் ஓட்டுநரின் கட்டுக்குள் இருந்த கார் திடீரென மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இவரது மகள் உயிரிழந்து விட்டார். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், பாலபாஸ்கர் இன்று காலை உயிரிழந்து விட்டார். அவரது இறுதி சடங்குகள் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும். இவரின் மனைவி லட்சுமி மற்றும் கார் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர் தனது 17வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றிற்கு இசையமைத்து புகழ் பெற்றார். அதன்பின்பு பல்வேறு படங்களுக்கும் பாலபாஸ்கர் இசையமைத்து உள்ளார். இது தவிர்த்து கேரளா மற்றும் வேறு இடங்களிலும் மேடை கச்சேரிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com