தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பா? - அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளதாக கருதி அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பா? - அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு
Published on

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் பூர்வவர்த்தமான் மாவட்டத்தில் பகிர்கன்யா என்ற கிராமத்தில் நில அளவைத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் அங்குள்ள கோவில்கள் மற்றும் மசூதிகளை படம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக வந்துள்ளதாக கருதி அவர்களிடம் விசாரித்தனர். அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அவர்களிடம் வற்புறுத்தினர். அதற்கு களப்பணியாளர்கள் மறுத்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அதிகாரிகளை சிறைப்பிடித்தனர். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து களப்பணியாளர்களை கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. களப்பணியாளர்கள் நில அளவைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் அவர்களை விடுவித்துவிட்டு திரும்பிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com