கோவை அருகே, 141 செங்கல் சூளைகளை மூட கலெக்டர் உத்தரவு

கோவை அருகே 141செங்கல்சூளைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Published on

கோவை,

கோவையை அடுத்த தடாகம் பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படுவதாவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறி மாவட்ட கலெக் டரிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

எனவேஇதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் செங்கல் சூளைகளால் காற்று மாசுபடுகிறதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரும் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கோவை தடாகத்தில்உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை அருகே உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் 141 ஆலைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த செங்கல் சூளைகள் செயல்படுவதற்கும் அவற்றிற்கு தேவையான சூளை மண் வெட்டி எடுத்துச் செல்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் முறையான அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே செங்கல் சூளைகள் உடனடியாக உற்பத்தியைநிறுத்தி மூட வேண்டும். இதுவரை அனுமதியின்றிசெயல்பட்டு வந்ததற்காக தங்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின்படி ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான தங்களது எழுத்துப்பூர்வமானவிளக்கத்தை இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15நாட்களுக்குள் அளிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனுமதியின்றி செங்கல் சூளை உற்பத்தி பணியை தொடர்ந்தால் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com