திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள தெற்குபெட்டை குளத்தை சேர்ந்தவர் கோயில் மணி. இவரது மகள் அந்தோணி ரதி(வயது21). பிளஸ்-2 படித்துள்ள இவர், திசையன்விளையில் உள்ள செல்போன் கடை ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த வேலைக்கு செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. இவர்களுக்கு சொந்தமாக மாடுகள் இருப்பதால், அதை பராமரிக்குமாறு தாயார் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
நேற்றும் செல்போன் கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தாயார் தடை விதித்ததுடன், மாடுகளை பராமரிக்குமாறு கூறியதை கேட்டு அந்தோணி ரதி மனமுடைந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் அந்த வீட்டுக்கு சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய அந்தோணி ரதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.