கும்மிடிப்பூண்டி அருகே அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது

கும்மிடிப்பூண்டி அருகே அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது, கும்மிடிப்பூண்டி வன சரகர் மாணிக்கவாசகம் தலைமையிலான வனத்துறையினர் பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வயல்வெளியில் பதுங்கி இருந்த வெள்ளை நிற நாகபாம்பு குட்டியை நேற்று கும்மிடிப்பூண்டி வன சரகர் மாணிக்கவாசகம் தலைமையிலான வனத்துறையினர் பிடித்தனர்.

இந்த அபூர்வமான அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வனசரகர் மாணிக்கவாசகம் கூறியதாவது:-
இந்த பாம்பானது வெள்ளை நிற கோதுமை நாகம் வகையைச்சேர்ந்தது. இது அரிய வகையான பாம்பு இனம். 50 ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தென்படக்கூடியது.

மரபின குறைபாட்டால் நாக பாம்பில் இந்த வெள்ளை நிறம் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இந்த பாம்பு வெளியே வராது. இரவு நேரத்தில் மறைவான பகுதியில் இருக்கும். இது பொதுமக்களின் கண்களுக்கு அதிகமாக தென்படக்கூடிய வகையினம் கிடையாது. மிக கொடுமையான விஷம் உடையது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com