ஓசூர் அருகே, 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூர் அருகே 2 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர் அருகே, 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடிசாகனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது38). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் டி.வி. ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல், குடிசாகனபள்ளி அருகேயுள்ள கோகுல் நகரை சேர்ந்த முரளி(56) என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நாகராஜ் மற்றும் முரளி ஆகியோர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com