மீஞ்சூர் அருகே 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

மீஞ்சூர் அருகே 2 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன.
Published on

மீஞ்சூர்,

பொன்னேரியில் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து தத்தைமஞ்சி கிராமத்தின் வழியாக அரசு பஸ்கள் இயக்கப் படுகிறது. இந்த அரசு பஸ்கள் மூலம் திருவெள்ளைவாயல், காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் தினந்தோறும் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு பணிமனைக்கு புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை.

இதனையடுத்து தத்தைமஞ்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 அரசு பஸ்களை சிறைபிடித்தனர். தகவலறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com