பண்ருட்டி அருகே, காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்வேலன் (வயது 25). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகள் சுபா(20). இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 8 மாதத்தில் ஹர்சன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இ தனால் சுபா, மனமுடைந்தநிலையில் காணப்பட்டார்.

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அவர், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சுபாவின் உலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com