பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்; மாணவன் கைது

பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
Published on

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. மாற்றுத்திறனாளியான இவள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். காலாண்டு விடுமுறையில் சிறுமி ஜக்கம்பட்டிக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவன், அந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடலில் காயம் இருந்ததை கண்டு அது குறித்து அவளுடைய பாட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் சிறுமியை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாற்றுத்திறனாளி சிறுமியை, 15 வயது மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com