அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

தணிகை போளூர் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து அண்ணாமலை தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள வளர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். அவருடைய மகன் அண்ணாமலை (வயது 21). இவர், நேற்று முன்தினம் அவரது நண்பர் ரமேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வளர்புரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார்.

தணிகை போளூர் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து அண்ணாமலை தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com