படப்பை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

படப்பை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
படப்பை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள கருணாகரச்சேரி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல், (வயது 55) விவசாயி. இவர் சென்னையில் வசித்து வரும் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான கருணாகரச்சேரியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று கால்வாயை தாண்டும் போது ஏற்கனவே மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் தாக்கி ஞானவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்து போலீசார் விசாரணை செய்து ஞானவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com