திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மேலானூரை சேர்ந்தவர் காசி. இவரது மகன் ராஜா(வயது 35). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக உள்ளார். ராஜா தனது நண்பரின் மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கடலூர் சென்றார். பின்னர் அங்கிருந்து திருவள்ளூருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இருக்கை அருகே கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணும், 17 வயது சிறுமியும் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதை கவனித்த ராஜா அவர்களிடம் பேச்சு கொடுத்தார். இவர்கள் இருவரும் வீட்டில் சண்டை போட்டு விட்டு வேலை தேடி சென்னை செல்வதாக தெரிவித்தனர். அதற்கு ராஜா தனக்கு நிறுவனங்களில் வேலை செய்யும் நிறைய நண்பர்களை தெரியும். அவர்களிடம் சொல்லி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
அவரது பேச்சை அவர்கள் நம்பினர். இளம்பெண் மற்றும் சிறுமியை ராஜா தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் அவர்களது நிலைமையை எடுத்து கூறினார். பின்னர் ராஜா தனது நண்பர்களிடம் அவர்களது வேலை தொடர்பாக பேசினார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் ஊருக்கே செல்வதாக கூறி உள்ளனர். தங்களை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கொண்டு சென்று விடும்படி ராஜாவிடம் கூறினார்கள். இதையடுத்து ராஜா முதலில் சிறுமியை திருவள்ளூர் பஸ்நிலையத்தில் கொண்டு விட்டார். பின்னர் இளம்பெண்ணை பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஈக்காடுகண்டிகை அருகே வரும்போது ராஜா அவரிடம் வெயில் அதிகமாக உள்ளது. சிறிது நேரம் சவுக்கு தோப்பில் ஓய்வு எடுக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து ராஜா அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பதறிய இளம்பெண் அழுது கொண்டே சவுக்கு தோப்பில் இருந்து வெளியே ஓடிவந்தார்.